NATIONAL

பேராக்கில் மீண்டும் வெள்ளம் - கெடாவில் மேலும் அதிகமானோர் நிவாரண மையங்களுக்கு மாற்றம்

1 அக்டோபர் 2024, 3:53 AM
பேராக்கில் மீண்டும் வெள்ளம் - கெடாவில் மேலும் அதிகமானோர் நிவாரண மையங்களுக்கு மாற்றம்

கோலாலாம்பூர், அக். 1- கெடா மாநிலத்தின் பாலிங் மாவட்டம்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புதிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று

காலை 8.00 மணி நிலவரப்படி அம்மாநிலத்தில் வெள்ளத்தில்

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 457 குடும்பங்களைச் சேர்ந்த 1,373 பேராக

அதிகரித்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 426 குடும்பங்களைச்

சேர்ந்த 1,332 பேராக இருந்தது.

பாலிங் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள நான்கு தற்காலிக நிவாரண

மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்க

வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அறிக்கை

கூறியது.

இதனிடையே, கெடா மாநிலத்தில் வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட

மாவட்டமாக பொக்கோ செனா தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கு 221

குடும்பங்களைச் சேர்ந்த 697 பேர் ஐந்து நிவாரண மையங்களில்

அடைக்கல நாடியுள்ளனர்.

அதே சமயம், கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் 130 குடும்பங்களைச் சேர்ந்த

416 பேர் தித்தி காஜா, ஆலோர் மேரா, கப்பளா பாத்தாஸ் ஆகிய

இடங்களில் மைக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க

வைக்க்கப்பட்டுள்ளனர். குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள இரு நிவாரண

மையங்களில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேர் தங்கியுள்ளனர்.

வெள்ளம் காரணமாக பேராக் மாநிலத்தின் கம்பார் மாவட்டத்திலுள்ள

டத்தோ அஸ்மான் மஹாலான் சமூக மண்டபத்தில் ஒரு துயர் துடைப்பு

மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைச் செயலகம்

கூறியது.

நேற்றிரவு 11.00 மணி நிலவரப்படி இம்மாவட்டத்தில் நான்கு

குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் இந்த மையத்தில் அடைக்கலம்

நாடியுள்ளதாக அச்செயலகம் குறிப்பிட்டது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டஅவர்கள் அனைவரும் கோல டிப்பாங்,

கம்போங் பத்து 20 மற்றும் மாலிம் நாவார் கம்போங் பூலாவ் பீசாங் ஆகிய

இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.