NATIONAL

தீயினால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டனர்

1 அக்டோபர் 2024, 3:17 AM
தீயினால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டனர்

கோத்தா கினபாலு, அக் 1: நேற்று லிகாஸ் ஜாலான் லெம்பகா பாடி, லோரோங் பூரோங் கெலேதோ, எனும் இடத்தில் மூன்று வீடுகள் தீயினால் பாதிக்கப்பட்டன. அதில் ஐந்து பேர் அதாவது மூன்று முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் சிக்கி கொண்டனர்.

தீயணைப்புப் படை மதியம் 12.54 மணிக்கு சம்பவ இடத்தை வந்தடைந்ததாக சபா மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் மூன்று வீடுகளும் 100 சதவீதம் எரிந்தன. அத்துடன் ஒரு மளிகைக் கடை, ஸ்டோர் மற்றும் இரண்டு வாகனங்கள் எரிந்தன.

"இதில் ஐந்து பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 1.29 மணிக்கு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விரிவான தகவல்களை இன்னும் விசாரித்து வருவதாக" அறிக்கை கூறுகிறது.

தீயை அணைக்கும் பணியில் லிந்தாஸ், கோத்தா கினாபாலு மற்றும் புந்ததான் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களை (பிபிபி) சேர்ந்த மொத்தம் 33 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.