NATIONAL

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன

30 செப்டெம்பர் 2024, 5:02 AM
உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், செப் 30: உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடரும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், மாநில அரசின் கீழ் சில கல்வி உதவிகள் அக்டோபர் வரை திறந்திருக்கும்.

அவற்றில் சிலாங்கூர் மாநிலத்தின் அரசின் மற்றும்  துணை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பணியாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி நிதியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டண நிதியுதவி, புத்தகக் கொடுப்பனவு, உபகரணங்கள், வாழ்க்கைச் செலவு மற்றும் படிப்புச் செலவுகள் போன்றவைக்கு ஊழியர்களின் பிள்ளைகள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அக்டோபர் 20 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத் தேவைகள்:

  • விண்ணப்பதாரர்கள் மற்றும் பெற்றோர்கள் மலேசியா குடிமக்களாக இருக்க வேண்டும்

  • அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிக்க வேண்டும்.

  • குடும்ப வருமானம் மாதத்திற்கு RM20,000க்கு மேல் இருக்கக்கூடாது

  • விண்ணப்பதாரர் இறுதி ஆண்டு மாணவர் மற்றும் வேறு உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.

அனைத்து நிதி உதவிக்கும் edanapendidikan.selangor.gov.my என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் சிலாங்கூர் மாநில கல்வி நிதியுதவி போர்ட்டலில் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.