NATIONAL

பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த மாநில அரசு RM 59 மில்லியன் ஒதுக்கீடு

30 செப்டெம்பர் 2024, 5:01 AM
பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த மாநில அரசு RM 59 மில்லியன் ஒதுக்கீடு

உலு லங்காட், செப் 30: மக்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு முழுவதும் பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த மாநில அரசு RM 59 மில்லியன் செலவிட்டுள்ளது.

தனிநபர்களுக்கு (RM250) குடும்பப் பிரிவினருக்கு RM500 என அடிப்படை சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு இல்திசாம் சிலாங்கூர் சிஹாட் திட்டம் உதவுகிறது என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"சிகிச்சையுடன் கூடுதலாக நோய் தடுப்புக்கு சிலாங்கூர் முக்கியத்துவம்  வழங்குகிறது. எனவே சிலாங்கூர் சாரிங் மூலம் அரசு இலவச மருத்துவ பரிசோதனை திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. " என்று ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

பண்டார் டெக்னாலஜி காஜாங் பல்நோக்கு மண்டபத்தில் நடந்த சுகாதார கார்னிவலில் பேசிய அவர், சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

"இந்த சுகாதார பரிசோதனை இலவசம் ஆனால் மக்கள்  நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வருகை புரிந்து பரிசோதனைகளில் கலந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.