பெய்ரூட், செப் 29: சனிக்கிழமை தெற்கு லெபனானில் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 65 பேர் காயமடைந்தனர் என்று லெபனான் இராணுவ ஆதாரங்களை மேற்கோள்காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள சுமார் 45 கிராமங்கள் மற்றும் நகரங்களை குறிவைத்து இஸ்ரேலிய விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மாலையில் சுமார் 90 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்பட்டது.
இந்த தாக்குதல் பல கிளினிக்குகள் மற்றும் அரசு பாதுகாப்பு மையங்களை பாதித்தது. அதில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆவர்.
8 அக்டோபர் 2023 முதல், காசா பகுதியில் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும் அடையாளமாக லெபனான்-இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்பொல்லா இஸ்ரேலுக்கு எதிராக தக்குதல் நடத்தியது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியான தாஹியில் உள்ள ஹிஸ்பொல்லாவின் தலைமையகம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதலைத் தொடுத்தன, அதில் ஹிஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். நஸ்ரல்லாவின் மரணம் ஹிஸ்புல்லாவாலும் உறுதிப்படுத்தப்பட்டது.
-பெர்னாமா-சின்ஹுவா


