மிரி, செப் 29 – சரவாக்கிற்கு நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் பணி நிமித்த பயணத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு சரவாக்கூ சாயாங் என்னும் மக்கள் ஒருமைப்பாடு நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதில் பிரதமருடன் சரவாக் பிரிமியர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி ஓபெங், மேலவை த் தலைவர் டத்தோ அவாங் பீமி அவாங் அலி பாஷா, அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார், சரவாக் மாநில சட்டப் பேரவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அஸ்பியா அவாங் நாஸ்ஸர், பல மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்றம் அமைச்சத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்தது.
இன்று காலை, பிதமர் கபிட்டிற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் பல கூட்டரசு உள்கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்வார். கபிட் நகரம் மற்றும் அருகில் வசிப்பவர்களுடன் சந்திப்பு அமர்வில் கலந்துகொள்வார்.
- பெர்னாமா


