NATIONAL

பாரா சுக்மா-  29 தங்கப் பதக்க இலக்கை சிலாங்கூர் அடைந்தது- மந்திரி புசார் பெருமிதம்

28 செப்டெம்பர் 2024, 7:08 AM
பாரா சுக்மா-  29 தங்கப் பதக்க இலக்கை சிலாங்கூர் அடைந்தது- மந்திரி புசார் பெருமிதம்

ஷா ஆலம், செப். 28- சரவா மாநிலத்தில் நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மலேசிய பாரா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) 29 தங்கம், 42 வெள்ளி மற்றும் 39 வெண்கலப்பதக்கங்களை வென்றதன் வழி நிர்ணயிக்கப்பட்ட பதக்க இலக்கை சிலாஙகூர் அடைந்துள்ளது.

இன்னும் முடிவடையாத மேலும் சில விளையாட்டுகளின் மூலம் இந்த பதக்க எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில் கூறியுள்ளார்.

சரவா மாநிலத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி. சிலாங்கூர் சுக்மா அணி 29 தங்கப் பதக்கங்களை வென்று நிர்ணயிக்கப்பட்ட பதக்க இலக்கை அடைந்துள்ளது.

தங்கம் பெறும் வாய்ப்புள்ள மேலும் சில போட்டிகள் இன்னும் நடைபெறவில்லை. அப்போட்டிகள் மூலம் இம்முறை இலக்கைத் தாண்டி பதக்கங்களை வெல்ல முடியும் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 22 முதல் 28 வரை நடைபெறும் பாரா சுக்மா போட்டியில் 29 தங்கம், 24 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களை வென்று முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெற சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி முன்னதாக கூறியிருந்தார்.

இந்த பாரா சுக்மா போட்டியில் பூப்பந்து, நீச்சல், அம்பு எய்தல், பிங் பாங் 10  அங்கங்களிலும் பங்கேற்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.