மையம் ஒன்றின் மீது நேற்றிரவு அதிரடிச் சோதனை நடத்திய
குடிநுழைவுத்துறை அதிகாரிகள் 164 சட்டவிரோதக் குடியேறிகளைக்
கைது செய்தனர்.
பேரங்காடி ஒன்றில் அமைந்துள்ள அந்த பொழுது போக்கு மையம்
வெ.1,000 முதல் வெ.100,000 வெள்ளி வரையிலான கட்டணத்தில் அந்நிய
உபசரணை தொடர்பு அதிகாரிகள் (ஜி.ஆர்.ஒ.) சேவையை வழங்கி
வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்ப முயன்ற சில பெண்கள் கீழே விழுந்து
காயங்களுக்குள்ளாயினர்.
சில ஜி.ஆர்.ஓ.க்கள் கழிப்பறை மற்றும் ஸ்டோர் அறைகளில் பதுங்கிக்
கொண்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையில் 21 முதல் 60 வயது வரையிலான 164
பேர் கைது செய்யப்பட்டனர் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை
இயக்குநர் வான் முகமது சவுபி வான் யூசுப் கூறினார்.
வியட்நாமியர்கள், 27 வங்காளதேசிகள், ஓன்பது சீனப் பிரஜைகளும்
அடங்குவர் என அவர் தெரிவித்தார்.
பிரிவுகளின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்
மேலும் சொன்னார்.
கைதான சில பெண்கள் நீண்ட கால சோசியல் விசிட் பாஸ் அல்லது
துணைவியர் பாஸ் போன்ற ஆவணங்களை வைத்திருந்தனர். எனினும்
தங்கள் கணவர் எங்கே இருக்கிறார் என்ற விபரம் அவர்களுக்குத்
தெரியவில்லை என்றார் அவர்.
புறம்பான முறையில் வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக அந்த
பொழுதுபோக்கு மையத்தின் உரிமையாளரும் நான்கு பராமரிப்பாளர்களும்
கைது செய்யப் பட்டனர் என்று அவர் சொன்னார்.








