NATIONAL

கெடா வெள்ளம் - 163 குடும்பங்கள் நிவாரண மையங்களில் அடைக்கலம்

27 செப்டெம்பர் 2024, 5:07 AM
கெடா வெள்ளம் - 163 குடும்பங்கள் நிவாரண மையங்களில் அடைக்கலம்

அலோர்ஸ்டார், செப். 27- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கெடா

மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 163

குடும்பங்களைச் சேர்ந்த 609 பேராக உள்ளது.

பெண்டாங் மாவட்டத்திலுள்ள எட்டு துயர் துடைப்பு மையங்களில்

அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின்

பேரிடர் தகவல் அறிக்கை கூறியது.

தானா மேரா, பெண்டாங், புக்கிட் ஜெனுன், ஆகிய இடங்களில் உள்ள

பள்ளிகளில் செயல்பட்டு வரும் துயர் துடைப்பு மையங்களில் அவர்கள்

அடைக்கலம் நாடியுள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இதனிடையே, இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சுங்கை லாக்கா

ஆற்றின் குபாங் பாசு, கம்போங் பாடாங் பாசீர் பகுதியில் நீர் மட்டம்

அபாயக் கட்டத்தைத் தாண்டி 22.23 மீட்டராகப் பதிவாகியுள்ளது என்று

வடிகால் மற்றும நீர் பாசனத் துறையின் பொது தகவல் அகப்பக்கம்

கூறியது.

கோத்தா ஸ்டார் மாவட்டத்திலுள்ள சுங்கை கெடா, சுங்கை அனாக் புக்கிட்

தாமான் அமான் பகுதி மற்றும் சுங்கை அனாக் புக்கிட் ஜம்பத்தான் தார்

பகுதி ஆகியவற்றில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவில் உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.