NATIONAL

முப்பது வயதுக்கும் கீழ்ப்பட்ட 90 விழுக்காடு இ.பி.எஃப். சந்தாதாரர்கள் போதிய ஓய்வு கால சேமிப்பைக் கொண்டிருக்கவில்லை

27 செப்டெம்பர் 2024, 4:02 AM
முப்பது வயதுக்கும் கீழ்ப்பட்ட 90 விழுக்காடு இ.பி.எஃப். சந்தாதாரர்கள் போதிய ஓய்வு கால சேமிப்பைக் கொண்டிருக்கவில்லை

கோலாலம்பூர், செப். 27- முப்பது வயதுக்கும் கீழ்ப்பட்ட 90 விழுக்காடு ஊழியர் சேமநிதி வாரிய (இ.பி.எஃப்.) உறுப்பினர்கள் ஓய்வு காலத்தில் தேவைப்படக்கூடிய அளவுக்கு போதுமான சேமிப்பைக் கொண்டிருக்கவில்லை.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் அனுமதிக்கப்பட்ட நிதி மீட்பு நடவடிக்கைகள் இ.பி.எஃப். சந்தாதாரர்களின் நிதி சேமிப்பு குறைந்ததற்கு பொதுவான காரணமாக விளங்குவதாக கஸானா ஆய்வுக் கழகம் (கே.ஆர்.ஐ.) கூறியது.

பொதுச் சேவைத் துறை மற்றும் அதிகாரப்பூர்வமற்ற துறைகள் தவிர்த்து நாட்டிலுள்ள மனித் வளத்தில் 60 விழுக்காட்டினர் இ.பி.எஃப். பிரதிநிதிப்பதாக அக்கழகத்தை மேற்கோள் காட்டி பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐம்பத்தைந்து வயதை அடையும் போது 240,000 வெள்ளி சேமிப்பைக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக இ.பி.எஃப். சந்தாதாரர்கள் தங்களின்  30வது வயதில் 35,000 வெள்ளியை சேமிப்பாக கொண்டிருக்க வேண்டும் என்று அந்த வாரியம் மதிப்பிடுகிறது.

முப்பது வயதுக்கும் குறைவான முதல் பத்து விழுக்காட்டினர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 35,000 வெள்ளிக்கும் அதிகமான சேமிப்பைக் கொண்டுள்ளது 2019 முதல் 2022 வரை ஊழியர் சேம நிதி சந்தா தரவுகள் காட்டுகின்றன

கடந்த 2022ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் பத்து விழுக்காட்டினரின் சராசரி சேமிப்பு 49,061 வெள்ளியாக இருந்தது.

ஆள்பலச் சந்தையில் நுழையும் போது வழங்கப்படும் குறைவான அடிப்படைச் சம்பளம் இ.பி.எஃப்.பின் அடிப்படை சேமிப்பு இலக்கை அவர்கள் அடைய முடியாமல் போவதற்கான காரணமாக அமைவதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.