NATIONAL

சிறார்களை பிரம்பால் அடித்துக் காயப்படுத்திய குளோபல் இக்வான் உறுப்பினருக்கு 10 ஆண்டுச் சிறை

26 செப்டெம்பர் 2024, 9:01 AM
சிறார்களை பிரம்பால் அடித்துக் காயப்படுத்திய குளோபல் இக்வான் உறுப்பினருக்கு 10 ஆண்டுச் சிறை

ஷா ஆலம், செப். 26 - பத்து முதல் 12 வயது சிறார்களை பிரம்பால்

அடித்துக் காயப்படுத்திய குற்றத்திற்காக ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ்

நிறுவன உறுப்பினர் ஒருவருக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில்

இன்று பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி நோரிடா ஆடாம் முன்னிலையில் ஆஜரான பாருள்ரஹிம் ஹிஷாம்

(வயது 23) என்ற அந்த நபருக்கு எதிராக 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின்

31(1)(ஏ) பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டதாக

மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின்

31(1)(ஏ) பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்று தேசிய

போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் நேற்று

கூறியிருந்தார்.

பல சிறார்கள் துன்புறுத்தப்படுவதைச் சித்தரிக்கும் காணொளி சமூக

ஊடங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் காவல்

துறையினர் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி விசாணையைத் தொடக்கினர்.

அச்சிறார்கள் வலியால் துடித்துக் கொண்டு ஆடவர் ஒருவரின்

கேள்விகளுக்கு பதிலளிக்கும் காட்சி அந்த காணொளியில் இடம்

பெற்றிருந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட

அச்சிறார்களை போலீசார் வெற்றிகரமாக மீட்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.