NATIONAL

ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துக்கான புதிய பாதைகள் மற்றும் வேன் சேவை (டிஆர்டி) இறுதி செய்யப்படும்

26 செப்டெம்பர் 2024, 8:57 AM
ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துக்கான புதிய பாதைகள் மற்றும் வேன் சேவை (டிஆர்டி) இறுதி செய்யப்படும்

ஷா ஆலம், செப் 26: ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துக்கான புதிய பாதைகள் மற்றும் தேவைக்கேற்ப வேன் சேவை (டிஆர்டி) ஆகியவை அடுத்த ஆண்டுக்குள் இறுதி செய்யப்படும் என்று போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து பாதை தீர்மானிப்பதற்கான விவாதங்கள் பிபிடி, பிரசாரண மலேசியா பெர்ஹாட் மற்றும் ரேபிட் பஸ் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது என இங் சீ ஹான் கூறினார். .

"ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து வழித்தடமும் பிரசாரனா பாதையும் அதிகளவில் ஒன்றாக இல்லாததால் அதிக மாற்றங்கள் ஏற்படாது என அவர் தெரிவித்தார்.

"சிலாங்கூர் மக்களின் நலனுக்காக முழுமையான பொதுப் போக்குவரத்து இணைப்பை உறுதிசெய்யும் வகையில் மாநில அரசு இந்த பாதைகளை சரியாக அமைக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

கடந்த ஜனவரியில், சேவையை மேம்படுத்த நோக்கத்தில் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து வழித்தடத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசு பிபிடிக்கு உத்தரவிட்டது. அதன் மூலம் டிஆர்டி பாதைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

2015 மற்றும் ஜூன் 2023க்கு இடையில் 60 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பேருந்தைப் பயன்படுத்தியுள்ளனர். RM45 மில்லியன் வருடாந்திர ஒதுக்கீட்டின் மூலம் 50 வழித்தடங்களுக்கு 166 பேருந்துகள் வழங்கப்பட்டன.

நவம்பர் 2023 முதல் செயல்படுத்தப்பட்ட டிஆர்டி வேன்கள், குறுகிய வழித்தடங்கள் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட இடங்களில் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவைக்கு பதிலாக உருவாக்கப்பட்டது. இது ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட 54,000 பயனர்களைப் பதிவு செய்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.