NATIONAL

குளிர்காலம் வருவதற்கு முன் காசா மக்களுக்கு தங்குமிடம் தேவை

26 செப்டெம்பர் 2024, 8:07 AM
குளிர்காலம் வருவதற்கு முன் காசா மக்களுக்கு தங்குமிடம் தேவை

ஜெனீவா, செப் 26: குளிர்காலம் வருவதற்கு முன் காசாவில் உள்ள ஒரு மில்லியன்  மக்களுக்கு உடனடியாக தங்குமிடம் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.)  வீட்டு உரிமைக்கான சிறப்பு அறிக்கையாளர் கடந்த புதன்கிழமை தெரிவித்தார்.

காசாவில் உள்ள ஒரு மில்லியன் மக்களுக்கு குளிர்காலம் வருவதற்கு முன் அவசர தங்குமிடம் தேவை.  “இதற்கு அவசர நடவடிக்கை தேவை!,” என்று பாலகிருஷ்ணன் ராஜகோபால் எக்ஸ்

தளத்தில் தெரிவித்தார்.

உடனடியாகப் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு  விடுத்திருந்த போதிலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காஸா மீது இஸ்ரேல்  கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இத்தாக்குதலில் கிட்டத்தட்ட 41,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 96,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல், உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் மருந்துக்கு கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்திய நிலையில் கிட்டத்தட்ட மொத்த மக்களையும்

வீடற்றவர்களாக ஆக்கியுள்ளது.

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக தற்போது சர்வதேச  நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கை எதிர்கொள்கிறது.

- பெர்னாமா-அனடோலு

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.