NATIONAL

அரசியல் கட்சிகளின் பதிவு முறையை மேம்படுத்த வல்லுநர்கள் ஆலோசனை

26 செப்டெம்பர் 2024, 7:57 AM
அரசியல் கட்சிகளின் பதிவு முறையை மேம்படுத்த வல்லுநர்கள் ஆலோசனை

கோலாலம்பூர், செப் 26: அரசியல் கட்சிகளின் பதிவு செயல் முறையை மேம்படுத்த குறிப்பிட்ட சட்டங்களை இயற்றுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளில் ஈடுபடுபவர்கள் அரசாங்கமாகி, முழு நாட்டையும் பாதிக்கும் கொள்கைகளை உருவாக்குவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என  அரசியலமைப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"எனவே, கட்சிகளின் பதிவு,  அரசியலமைப்பின் அடிப்படையில் அரசியல் கட்சி செயல்முறை, செயல் பாடுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் உள் விவகாரங்களை நிர்வகித்தல் ஆகியவற்றை வழங்கும் ஒரு குறிப்பிட்ட சட்டம் தேவை" என்று பேராசிரியர் டத்தோ ஷாம்ராஹாயு அப் அஜீஸ் கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்தின் பிரதான கட்டிடத்தில் ஊடகவியலாளர்களுடன் மக்களவை அமர்வின் மூன்றாவது சந்திப்பை உள்ளடக்கிய நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் செயல் முறை இப்போது உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மலேசிய சங்கங்களின் பதிவாளர் (RoS) மூலம் மேற் கொள்ளப் படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

மக்களின் பிரதிநிதிகள் தங்கள் கட்சிகளின் நலன்களுக்கு மேலாக நாட்டின் நலனை வைத்து முதிர்ந்த அரசியல் கலாச்சாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஷாம்ராஹாயு தெரிவித்தார்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அமல்படுத்துவது, கட்சி மாறுவதன் மூலம் ஏற்படும் மாற்றத்தை தவிர்க்க தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளிடையே அரசியல் கல்வி அறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வேண்டும்.

"எழும் அனைத்து பிரச்சனைகளும் (கட்சி தாவல்கள்) சட்ட வழிகளில் மட்டுமே தீர்க்கப்பட முடியாது.

"அரசியல்வாதிகள் தங்கள் உணர்ச்சிகளைப் பின்பற்றி விவேகமற்ற செயல்களைச் செய்தாலும் எந்தவொரு சட்டத்தையும் இயற்றினாலும், அது இந்தப் பிரச்சனையைத் தீர்க்காது," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.