NATIONAL

தேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையர் ஜோடி சீனா ஓபன் பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடியது

24 செப்டெம்பர் 2024, 9:34 AM
தேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையர் ஜோடி சீனா ஓபன் பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடியது

கோலாலம்பூர், செப் 24: சீனாவில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் தேசிய ஆடவர் இரட்டையர் ஜோடியான கோ சீ வெய் – இஷானுடின் ரும்சானி, சீனா ஜோடியை தோற்கடித்து வரலாற்றைப் படைத்தனர்.

தேசிய அணி முதல் செட்டை 13-21 என இழந்த நிலையில் உலகின் ஏழாவது தரவரிசையில் உள்ள ஹீ ஜி டிங்-ரென் சியாங் யூ ஜோடி வெற்றி அடைய எளிதான பாதையை வழங்கவில்லை.

இருப்பினும், தேசிய ஆடவர் ஜோடி 21-12, 21-17 என்ற செட் கணக்கில் உலகின் ஏழாவது தரவரிசையில் உள்ள எதிராளியை எதிர்த்துப் போராடி, இறுதியாக வெற்றி வாகை சூடினர்.

இப்போட்டியில்,  தேசிய அணி US$148,000 (RM622,361) மற்றும் ஜி டிங்-சியாங் யூ US$70,000 (RM294,360) வென்றனர்

கடந்த மாத இறுதியில், மலேசியாவின் பூப்பந்து சங்கம் (BAM) செப்டம்பர் 1 முதல் கோ சீ வெய் – இஷானுடின் ரும்சானி ஜோடியை தொழில் ரீதியாக மாறுவதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.