NATIONAL

மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி மீண்டும் கைது

24 செப்டெம்பர் 2024, 4:32 AM
மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி மீண்டும் கைது

கோலாலம்பூர், செப் 24: செப்டம்பர் 18ஆம் தேதி சுங்கை பூலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி  தப்பி ஓடி மீண்டும் கைது செய்யப்பட்டதை சிறைத்துறை உறுதி செய்தது.

விசாரணைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நேற்று காலை 11 மணியளவில் குவாந்தான், பகாங்கில் விரைவு பேருந்து நிலையத்தில் சிறை அதிகாரிகளால் அந்த கைதி கைது செய்யப்பட்டார்.

"சம்பந்தப்பட்ட தடுப்புக் கைதி மேல் விசாரணைக்காக மலேசியன் காவல்துறையிடம் (PDRM) ஒப்படைக்கப்பட்டார்.

"புலனாய்வு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில், கடமைகளைச் செய்வதில் அலட்சியமாக இருந்த உறுப்பினர்கள் மீது சிறைத் துறை கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கும். " என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொது மக்கள் மற்றும் தேடுதல் நடவடிக்கை காலம் முழுவதும் உதவியவர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் சிறைத் துறை தெரிவித்துக் கொண்டது.

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுங்கை பூலோ சிறைக் கைதி ஒருவர் கடந்த புதன்கிழமை பிற்பகல் 3.56 மணியளவில் தப்பிச் சென்றதாகப் பெர்னாமா செய்தி வெளியிட்டது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.