NATIONAL

லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம்

23 செப்டெம்பர் 2024, 9:59 AM
லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம்

ஈப்போ, செப் 23: இன்று அதிகாலை சித்தியவான் அருகே மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் (WCE) கிலோமீட்டர் 202 இல், அலுவலகப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஐந்து டன் எடை கொண்ட லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

அதிகாலை 3.33 மணிக்கு இச்சம்பவம் குறித்து தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும் பின் சித்தியவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த உறுப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

இறந்தவர்கள் லாரியின் ஓட்டுநர் ரசாலி சஹாட் (48) மற்றும் பயணி முகமட் அலிசாத் நாராயி (28) என அடையாளம் காணப் பட்டதாக அவர் கூறினார்.

இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சு உறுதிப் படுத்தியதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேல் நடவடிக்கைக்காக உடல்கள் காவல் துரையிடம் ஒப்படைக்கப் பட்டதாக சபரோட்ஸி கூறினார்.

காலை 6.05 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிவடைந்தது என்றார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.