NATIONAL

RM7.7 மில்லியன் நிலுவை மதிப்பீட்டு வரி வசூல்

23 செப்டெம்பர் 2024, 9:55 AM
RM7.7 மில்லியன் நிலுவை மதிப்பீட்டு வரி வசூல்

கோம்பாக், செப் 23: மொத்த RM10.68 மில்லியன் மதிப்பீட்டு வரியின் நிலுவைத்

தொகையில் RM7.7 மில்லியனை செலாயாங் நகராண்மை கழகம் வசூலித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் இரண்டாவது தவணைக்கான பணம் செலுத்தும்

காலம் முடிவடைந்தது. பின்னர், 69,966 பணம் செலுத்தாதக் கணக்குகளுக்கு மதிப்பீட்டு

வரி நோட்டிஸை (படிவம் E) எம்பிஎஸ் அனுப்பியதாகவும் அதன் தலைவர் கூறினார்.

"இந்த அனைத்து மதிப்பீட்டு வரி கணக்கிற்கும் RM20 அதிகமாக வசூலிக்கப்படும்.

மேலும், இந்த நோட்டிஸ் செப்டம்பர் 30 அன்று காலாவதியாகும்.

"நோட்டீஸ் முடிவடைந்த பிறகு, இன்னும் பணம் செலுத்தாதக் கணக்குகளுக்கு RM100

கட்டணத்துடன் கைது வாரண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று ஷாமான்

ஜலாலுடின் மெனாரா எம்பிஎஸ் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.

``MYMPS`` போர்ட்டல் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் RM547,409.78 வருவாய் வசூலை

செலாயாங் நகராண்மை கழகம் பதிவு செய்தது என்றும் அவர் தெரிவித்தார்.

வியாபாரிகள், வணிக உரிமங்கள், கடை வாடகைகள், கட்டிட பெர்மிட் ஆகியவற்றிற்குப் பணம் செலுத்தவும் மற்றும் அவற்றை புதுப்பிக்கவும் MYMPS போர்டல்

மேம்படுத்தப்பட்டுள்ளது,`` என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.