சிபு, செப் 23: பத்தாங் இகான், கம்போங் ஹிலிர் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒன்பது பலகை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.
மாலை 6.43 மணிக்கு தீ விபத்து குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சரவாக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"அதைத் தொடர்ந்து, சிபு சென்ட்ரல், சுங்கை மேரா மற்றும் சிபு ஜெயா ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களை (பிபிபி) சேர்ந்த 25 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
"எட்டு முதல் ஒன்பது வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தீ கொழுந்து விட்டு எரிவதால் அருகிலுள்ள வீடுகளுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
- பெர்னாமா


