NATIONAL

குளோபல் இக்வான் நிறுவன வளாகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்- எம்.பி.எஸ்.

23 செப்டெம்பர் 2024, 4:48 AM
குளோபல் இக்வான் நிறுவன வளாகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்- எம்.பி.எஸ்.

செலாயாங், செப். 23 - குளோபல் இக்வான் செர்விசஸ் அண்ட் பிசினஸ்

ஹோல்டிங் (ஜி.ஐ.எஸ்.பி.எச்.) நிறுவன வர்த்தக வளாகங்கள் மீதான

அமலாக்க நடவடிக்கைகளை தாங்கள் வலுப்படுத்வுள்ளதோடு அவற்றை

தங்கள் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரவுள்ளதாக செலாயாங்

நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்) கூறியது.

ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாதது

கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அந்த வளாகங்ளுக்கு சீல் வைப்பது

உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செலாயாங் நகராண்மை

கழகத் தலைவர் அடி பைசால் அகமது கூறினார்.

கடந்த வாரம் காவல் துறையுடன் இணைந்து அமலாக்க நடவடிக்கையை

நாங்கள் மேற்கொண்டோம். அதில் லைசென்ஸ் இல்லாத வளாகங்களை

மூடுவது, பறிமுதல் செய்வது மற்றும் குற்றங்களுக்கு அபராதம் விதிப்பது

ஆகிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

இந்த நடவடிக்கை குளோபல் இக்வான் நிறுவனம் சம்பந்தப்பட்டது மட்டும்

அல்ல. எம்.பி.எஸ். நிர்ணயித்த விதிமுறைகளை மீறும் செலாயாங்

நகராண்மைக் கழக அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள

அனைத்து வர்த்தகர்களுக்கும் விடுகப்படும் எச்சரிக்கையாகவும் இது

விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

ரவாங், குண்டாங், தாசேக் பீருவில் நேற்று நடைபெற்ற 9வது குண்டார்

ஜியோபார்க் குண்டாங் ஜெட் ஸ்போர்ட் போட்டியை முடித்து வைத்தப்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ரவாங், கன்றி ஹோம்ஸ் பகுதியில் அமைந்துள்ள இக்வான் குளோபல்

நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு எதிராக சிலாங்கூர் மாநில

போலீசார் நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் அதிரடிச்

சோதனை நடத்தினர்.

ஜி.ஐ.எஸ்.பி.எச். பெயரில் செயல்பட்டு வந்த உணவகம், பழுதுபார்ப்பு

பட்டறை, பயன்படுத்தப்பட்ட ஜவுளி விற்பனை மையம், அச்சகம், பேக்கரி,

பேரங்காடி, ஹோட்டல், ஜவுளியகம், கோலரி உள்ளிட்ட இடங்களை அந்த

சோதனை நடவடிக்கை உட்படுத்தியிருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.