ALAM SEKITAR & CUACA

செப்டம்பர் 24 முதல் பருவமழை காலம் தொடங்கும்

20 செப்டெம்பர் 2024, 8:12 AM
செப்டம்பர் 24 முதல் பருவமழை காலம் தொடங்கும்

ஷா ஆலம், செப் 20: பருவமழை காலம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி எதிர்வரும் நவம்பர் தொடக்கம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு திசைகளிலிருந்து மிதமான காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) இயக்குனர் ஜெனரல் முகமட் ஹெல்மி அப்துல்லா கூறினார்.

இந்நிலைமை இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக மாலை மற்றும் அதிகாலையில் குறுகிய நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

"அத்தகைய வானிலை திடீர் வெள்ளம், மரங்கள் விழுதல் மற்றும் வலுவாக இல்லாத கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் சாத்தியம் உள்ளது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

எனவே, குறித்த காலப்பகுதி முழுவதும் விழிப்புடன் இருக்குமாறும், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து அவ்வப்போது அதிகாரப்பூர்வ மெட்மலேசியா இணைய தளத்தைப் பார்வையிடவும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வானிலை அறிக்கையை myCuaca செயலி மற்றும் அதிகாரப்பூர்வ மெட்மலேசியா சமூக ஊடகங்களை நாடலாம் அல்லது கூடுதல் தகவல்களுக்கு 1-300-22-1638 ஐ அழைக்கலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.