NATIONAL

தொழில்முனைவோர் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க (பி.கே.என்.எஸ்) RM500,000 நிதி ஒதுக்கீடு

20 செப்டெம்பர் 2024, 7:43 AM
தொழில்முனைவோர் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க (பி.கே.என்.எஸ்) RM500,000 நிதி ஒதுக்கீடு

கோலாலம்பூர், செப் 20 – திறமையான தொழில் முனைவோர் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்காக நாட்டில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNS) RM500,000க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெறும் மலேசிய சர்வதேச ஹலால் ஷோகேஸ் (மிஹாஸ்) கண்காட்சி 2024இல் பங்கேற்பதும் இதில் அடங்கும்.

மிஹாஸ் 2024இல் மேம்பாட்டுப் பிரிவின் (BPU) வழிகாட்டுதலின் கீழ் 14 பிகேஎன்எஸ் தொழில் முனைவோர் வெற்றிகரமாகப் பல பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் Jaqued Holdings Sdn Bhd, My Innovative Wellness Sdn Bhd, Abin Snack Food Supplier Enterprise, Krukkrapmy International Sdn Bhd மற்றும் BS Fitness Nutrition (M) Sdn Bhd ஆகியவை அடங்கும்.

"இந்த ஆண்டு மிஹாஸ்யில் மேம்பாட்டுப் பிரிவால் ஊக்குவிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் (F&B) துறையில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்களும் சர்வதேச அளவில் விரிவாக்கம், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் உலக சந்தையில் ஊடுருவுவதற்கான திறனை அளவிடுவதற்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்தது".

கிட்டத்தட்ட 80 சதவீத பிகேஎன்எஸ் தொழில் முனைவோர் உணவு மற்றும் பானங்கள் துறையில் இருப்பதால், சர்வதேச ஒத்துழைப்பு மூலம், குறிப்பாக ஹலால் துறையில் தங்கள் வணிக வலையமைப்பை விரிவுபடுத்த, கண்காட்சியில் பங்கேற்பு சரியான முடிவாகும்.

இதில் பங்கேற்பதன் மூலம் பிகேஎன்எஸ் தொழில்முனைவோர் மலேசிய ஏற்றுமதியாளர்களுக்கும் சர்வதேச வாடிக்கையாளருக்கும் இடையிலான வணிகப் பொருத்த திட்டமான சர்வதேச ஆதாரத் திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கிறது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.