அந்த கண்காட்சித் திட்டத்திற்கு சமூகத்தித்திடமிருந்து கிடைத்து வரும் வலுவான ஆதரவை இது பிரதிபலிப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்தார்.
முப்பது லட்சம் வருகையாளர் இலக்கை நிறைவு செய்த அதிர்ஷ்டசாலி பார்வையாளருக்கு ஒரு மோட்டார் சைக்கிள் பாராட்டின் அடையாளமாக வழங்கப்பட்டது என அவர் சொன்னார்.
இந்த வார இறுதியில் மஹா கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சம் பேரை எட்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
மஹா 2024 கண்காட்சிக்கு மலேசியர்கள் வழங்கும் வலுவான ஆதரவைப் பாராட்டும் வகையில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஐம்பது லட்சமாவது வருகையாளருக்கு பெரேடுவா அக்ஸியா காரை பரிசளிக்கும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இம்முறை மஹா கண்காட்சி நடைபெறும் 12 நாட்களில் 40 லட்சம் வருகையாளர்களை ஈர்க்கவும் 4 கோடி வெள்ளி நேரடி விற்பனை மற்றும் 60 கோடி வெள்ளி நிதியுதவிக்கான சாத்திய மதிப்பையும் பதிவு செய்ய முடியும் என்று முகமது சாபு முன்னதாக கூறியிருந்தார்.
மஹா கண்காட்சி தொடர்பான தினசரி அறிக்கையின் அடிப்படையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அமைச்சின் கீழ் உள்ள பேருந்துகள், வேன்கள், டிரம் வண்டி மற்றும் பகி சேவைகள் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு முகமது சாபு அறிவுறுத்தியுள்ளார்.


