NATIONAL

'சிலாங்கூர் காவல்துறை ஒருமைப்பாடு மராத்தோன்' ஓட்டப் போட்டிக்காகப் பல சாலைகள் மூடப்படும்

19 செப்டெம்பர் 2024, 6:19 AM
'சிலாங்கூர் காவல்துறை ஒருமைப்பாடு மராத்தோன்' ஓட்டப் போட்டிக்காகப் பல சாலைகள் மூடப்படும்

ஷா ஆலம், செப் 19 : எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 'சிலாங்கூர் காவல்துறை ஒருமைப்பாடு மராத்தோன்' ஓட்டப் போட்டிக்காகக் கிள்ளான் நகரில் பல சாலைகள் மூடப்படும்.

சாலை மூடல் நடவடிக்கை அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி காலை 10 மணிக்கு முடிவடையும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான்,

சிலாங்கூர் காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களை உள்ளடக்கிய சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வுக்காக மொத்தம் 31 சாலைகள் மற்றும் வழிகள் கட்டங் கட்டமாக முழுமையாக மூடப்படும்.

"குறிப்பிட்ட சாலையைப் பயன்படுத்துவோர், மாற்று வழிகளாக ஜாலான் தெங்கு கிளானா, லோரோங் கோத்தா ராஜா 4 மற்றும் லோரோங் கோத்தா ராஜா 6 ஆகியவற்றை பயன்படுத்தலாம். அவ்விடத்தில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவல் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்." என அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். .

ஜாலான் இஸ்தானா, ஜாலான் டத்தோ ஹம்சா, ஜாலான் மொஹெட், ஜாலான் தாலி ஆயர், ஜாலான் தாமான் இஸ்தானா, சிம்பாங் லீமா சாலை சந்திப்பு வட்டம் (ஜாலான் இஸ்தானாவை நோக்கி), பெர்சியாரன் தெங்கு அம்புவான் ரஹிமா (ஒரு வழிப்பாதை), ஜாலான் ஸ்ரீ சியந்தான் ஆகியவை கட்டங்களாக மூடப்படும் சாலைகள் மற்றும் வழிகள் ஆகும்.

மேலும், ஜாலான் துன் டாக்டர் இஸ்மாயில், ஜாலான் டாமாக், ஜாலான் சுங்கை ஜாதி, ஜாலான் கம்போங் ஜாவா, ஜாலான் டத்தோ முகமது சிடின், ஜாலான் லண்டாசான், ஜாலான் கம்போங் குவாந்தன், ஜாலான் புக்கிட் கூடா, ஜாலான் பத்து தீகா லாமா, முசேடின் பாலம், ஜாலான் தெங்கு டயாடின், ஜாலான் ஸ்டெசன், ஜாலான் பெசார், ஜாலான் ராயா திமோர் மற்றும் ஜாலான் கோத்தா ராஜா ஆகியவையும் மூடப்படும்.

இதற்கிடையில், ஜாலான் பாடாங், ஜாலான் இஸ்தானா, ஜாலான் லிமாவ், ஜாலான் ராஜா ஜூமாத், ஜாலான் ஸ்டேஷன் 2, ஜாலான் பெகவாய் மற்றும் ஜாலான் தெங்கு கிளானா 2 ஆகிய சாலைகளும் மூடப்படும்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.