NATIONAL

பெட்ரோல் RON97 மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 6 சென் குறைந்துள்ளது

19 செப்டெம்பர் 2024, 2:47 AM
பெட்ரோல் RON97 மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 6 சென் குறைந்துள்ளது

கோலாலம்பூர், செப் 19 – இன்று முதல் செப்டம்பர் 25 வரை பெட்ரோல் RON95இன் சில்லறை விலை லிட்டருக்கு RM2.05 ஆக இருக்கும் நிலையில் பெட்ரோல் RON97 (3.19)மற்றும் டீசலின் விலை (2.95) லிட்டருக்கு 6 சென் குறைந்துள்ளது.

உலக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, தீபகற்ப பகுதியில் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அரசாங்கம் சந்தை முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, உலகளாவிய எண்ணெய் சந்தை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் டீசல் எரிபொருளின் சில்லறை விலையை சரிசெய்து, விலை ஸ்திரத்தன்மையை ஆதரிக்கும்” என்று அது கூறியது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.