NATIONAL

சிகிச்சையின் போது கைதி கலைக்குமார் தப்பியோட்டம் - சுங்கை பூலோ மருத்துவமனையில் சம்பவம்

19 செப்டெம்பர் 2024, 2:10 AM
சிகிச்சையின் போது கைதி கலைக்குமார் தப்பியோட்டம் - சுங்கை பூலோ மருத்துவமனையில் சம்பவம்

கோலாலம்பூர், செப். 19 - சுங்கை பூலோ சிறைச்சாலையைச் சேர்ந்த கைதி

ஒருவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்

கொண்டிருந்தபோது தப்பியோடியதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

சுங்கை பூலோ மருத்துவமனைத் தரப்பினர் நேற்று மாலை 3.56

மணியளவில் காவல் துறையை அவசர எண்களில் தொடர்பு கொண்டு

கைதி ஒருவர் மருத்துவமனைக் கட்டிலில் காணப்படவில்லை என்றும்

அவர் தப்பியோடியிருக்கலாம் எனத் தாங்கள் சந்தேகிப்பதாகவும்

தெரிவித்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர்

சூப்ரிண்டெண்டன் முகமது ஹபிஷ் முகமது நோர் கூறினார்.

இருபத்தேழு வயதான ஏ.கலைக்குமார் என்பவரே தப்பியோடிய கைதி

எனக் கூறிய அவர், நான்கு குற்றவியல் மற்றும் நான்கு போதைப் பொருள்

உள்ளிட்ட எட்டு குற்றப்பதிவுகளை அவர் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தப்பியோடிய கைதியை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில்

தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் நேற்று வெளியிட்ட

அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

தப்பியோடிய கைதி பற்றிய தகவல் அறிந்தவர்கள் 03-61561222 என்ற

எண்களில் சுங்கை பூலோ காவல் நிலைய தலைமையகத்தைத் தொடர்பு

கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.