NATIONAL

உணவு விற்பதன் மூலம் கட்டாய தொழிலில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை

18 செப்டெம்பர் 2024, 9:41 AM
உணவு விற்பதன் மூலம் கட்டாய தொழிலில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை

கோம்பாக், செப் 18: உணவு விற்பனை மூலம் கட்டாய தொழிலில் ஈடுபடுத்தப் படும்  சிறுவர்களைப் பாதுகாக்க, சமூக நலத்துறையுடன் (ஜே.கே.எம்) மாநில அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.

மேலும், 16 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினர் வேலை செய்வதை  தடுக்கும் குழந்தைகள் சட்டம் 2001 இன் கீழ் ஜே.கே.எம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.

"பெரும்பாலான சிறுவர்கள் உணவகங்கள் மற்றும் எரிவாயு நிலையங்களில் உணவு விற்கும் சம்பவங்கள் குடும்பத்தில் உள்ள சமூகப் பிரச்சனைகளால் ஏற்படுகிறது. உதாரணமாக அவர்களின் பெற்றோர்கள் போதைக்கு அடிமையானவர்கள் ஆவர்.

வெளிநாட்டு  சிறுவர்கள் பாதிக்கப்படும் சம்பவங்களை கையாள்வதற்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR) மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் (NGO) அரசும் இணைந்து செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

"உதாரணமாகப் பண்டார் பாரு செலாயாங்கில் உள்ள வணிகப் பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் உள்ளூர் குடிமக்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.