NATIONAL

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சீனாவுக்கு நான்கு நாள் பயணம்

18 செப்டெம்பர் 2024, 8:50 AM
பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சீனாவுக்கு நான்கு நாள் பயணம்

பெய்ஜிங், செப். 18 - மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நான்கு நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு சீனாவுக்கு வருகை புரியவுள்ளதாகப் பெய்ஜிங் வெளியுறவு அமைச்சு இன்று தெரிவித்தது.

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பால இணைப்புத் திட்டங்களுக்கு புத்துயிரூட்டுவதற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் மாமன்னர் இப்பயணத்தை  மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிபர்  ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில்  நாளை முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அவர் சீனாவுக்கு வருகை மேற்கொள்வார் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. எனினும் இந்தப் பயணம் தொடர்பில்  மேலும் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சீனாவின் இரண்டாவது உயர்நிலை தலைவரான பிரதமர் லீ கியாங் கடந்த ஜூன் மாதம் கோலாலம்பூருக்கு பயணம் செய்தார். லாவோஸ் மற்றும் தாய்லாந்தில் உள்ள மற்ற சீனா ஆதரவு இரயில் திட்டங்கள் வாயிலாக  1,000 கோடி அமெரிக்க டாலர் (4,240 வெள்ளி)  மதிப்பிலான கிழக்குக் கரை  ரயில் இணைப்பை மேம்படுத்தும் மலேசியாவின் திட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.

சீனாவின் குன்மிங்கில் இருந்து சிங்கப்பூர் வரை ஜோகூர் வழியாகச் செல்லும்  உத்தேச பான்-ஆசியா இரயில் திட்டத்தை இந்த பரிந்துரை உட்படுத்தியுள்ளது என்று லி கூறினார்.

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான  அதிவேக ரயில் திட்டத்தை புதுப்பிக்கும் திட்டங்களைப் பற்றியும் சுல்தான் இப்ராஹிம் பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.