NATIONAL

கோல சிலாங்கூரில் உயர் தாக்கம் கொண்ட 21 திட்டங்கள் அமல் - ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் தகவல்

18 செப்டெம்பர் 2024, 4:42 AM
கோல சிலாங்கூரில் உயர் தாக்கம் கொண்ட 21 திட்டங்கள் அமல் - ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் தகவல்

கோல சிலாங்கூர், செப். 18 - பொருளாதாரம், சுற்றுலா, உணவு பாதுகாப்பு,

சமூகவியல் மேம்பாடு, சமூக திறனளிப்பு ஆகியவற்றை இலக்காகக்

கொண்ட 21 உயர் தாக்கம் கொண்ட திட்டங்கள் கோல சிலாங்கூரில்

அமலாக்கப்படவுள்ளன. கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2035

ஊராட்சி திட்ட (மாற்று) முன்வரைவில் இந்த திட்டங்கள் கோடிட்டுக்

காட்டப்பட்டுள்ளன.

இந்த திட்டங்கள் இம்மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு

நேர்மறையான தாக்கத்தையும் நீடித்த மேம்பாட்டையும் கொண்டு வரும்

என எதிர்பார்க்கப்படுவதாக வீடமைப்பு மற்றும் கலாசாரத் துறைக்கான

ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2035 ஊராட்சி திட்ட (மாற்று)

முன்வரைவில் 40 மேம்பாட்டு வியூகங்கள் மற்றும் 147 திட்டப்

பரிந்துரைகளை உள்ளடக்கிய நான்கு முக்கிய திட்டமிடல் துண்களை

அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

இதனுடன் கோல சிலாங்கூரின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மற்றும்

உள்ளடக்கிய சமூகத்தை உயர்த்தும் இலக்கு இந்த மாவட்டத்தில்

வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது என்று

அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள டேவான் கிரேண்டியரில் நடைபெற்ற கோல சிலாங்கூர்

நகராண்மைக் கழகத்தின் 2035 ஊராட்சி திட்ட (மாற்று) முன்வரைவு

தொடர்பான விளம்பர மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்வில்

உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக குறிப்பாக புஞ்சா ஆலம்

பகுதியை நெடுஞ்சாலையுடன் இணைப்பது உள்ளிட்ட 10 புதிய சாலைத்

திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சுற்றுலா மையமாக விளங்கும் கோல சிலாங்கூருக்கு அதிகமான

சற்றுலா பயணிகள் வருவதை இந்த திட்டங்கள் எளிதாக்கும் என்றார்

அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.