NATIONAL

மக்கள் கல்வித் திட்டம் (e-PTRS) செயலியை 1,000க்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்

18 செப்டெம்பர் 2024, 4:39 AM
மக்கள் கல்வித் திட்டம் (e-PTRS) செயலியை 1,000க்கும் மேற்பட்ட பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்

ஷா ஆலம், செப் 18: ஆகஸ்ட் 13 அன்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டம் (e-PTRS)  செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 1,000க்கும் மேற்பட்ட பயனர்கள் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

அதில் தேர்வுக் கணிப்புக் கேள்விகள், கற்றல் தொகுதிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் கற்றல் வீடியோ பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை எந்த நேரத்திலும் அணுகலாம் என எம்பிஐயின் தலைவர் தெரிவித்தார்.

"பிற மாநிலத்தில் உள்ள மாணவர்களும் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.  நாங்கள் அதை அனுமதிக்கிறோம், அதாவது இந்த கற்றல் தொகுதியின் விநியோகம் சிலாங்கூர் மாநிலத்திற்கு மட்டும் இல்லை மாறாக பிற மாநில மாணவர்களும் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்தை ஊக்குவிக்க சிலாங்கூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் சுற்றுப்பயணங்களை எம்பிஐ நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, 130,000 மாணவர்களுக்குக் கற்றல் நடவடிக்கை எளிதாக்கும் வகையில் இணைய விண்ணப்பத்தை உருவாக்கி சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டம் மேம்படுத்தப்பட்டதாக அமிருடின் கூறினார்.

கற்றல் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் குறிக்கோளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் இலவச இணையம் வழங்குவதன் அவசியத்தையும் நிர்வாகம் ஆய்வு செய்யும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.