NATIONAL

ஒப் குளோபல் விவகாரம் - மூன்று விசாரணை அறிக்கைகள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் தாக்கல்

18 செப்டெம்பர் 2024, 2:10 AM
ஒப் குளோபல் விவகாரம் - மூன்று விசாரணை அறிக்கைகள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் தாக்கல்

கோலாலம்பூர், செப். 18 - ஒப் குளோபல் தொடர்பான மூன்று விசாரணை

அறிக்கைகளை காவல்துறை மேல் நடவடிகைக்காக சட்டத் துறைத்

தலைவர் அலுவலகத்திடம் தாக்கல் செய்யும் என்று தேசிய போலீஸ்

படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.

அவை சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பில் இரு

குற்றப்பத்திரிகைகள் மற்றும் தண்டனைச் சட்டத்தின் 354வது பிரிவின் கீழ்

ஒரு விசாரணை அறிக்கை ஆகியவை ஆகும் எனக் கூறிய அவர், அவை யாவும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை உட்படுத்தியுள்ளன என தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பான முதல் கட்ட விசாரணையில் நெகிரி

செம்பிலானில் நான்கு விசாரணை அறிக்கைகள் மற்றும் சிலாங்கூரில்

ஆறு விசாரணை அறிக்கைகள் உள்பட மொத்தம் பத்து விசாரணை

அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

இரண்டாம் கட்ட விசாரணையில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான்,

பெர்லிஸ், கோலாலம்பூர் ஆகிய நான்கு மாநில போலீஸ்

தலைமையகங்கள் சம்பந்தப்பட்ட 23 விசாரணை அறிக்கைகள்

திறக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

மேலும் விரிவான அளவில் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக

கைது செய்யப்பட்டவர்களின் தடுப்புக் காவல் அனுமதியை நீட்டிப்பதற்கு

தாங்கள் அனுமதி கோரவுள்ளதாக ரசாருடின் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 155

பேரின் தடுப்புக் காவல் இன்றுடன் முடிவுக்கு வரும் வேளையில் நெகிரி

செம்பிலான், நீலாயில் கைது செய்யப்பட்ட இருவரின் தடுப்புக் காவல்

அனுமதி நேற்றுடன் முடிவுக்கு வந்தது என்றார் அவர்.

இந்த வழக்கு விசாரணைக்காக மொத்தம் 740 பேரிடம் வாக்குமூலம் பதிவு

செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் 30

புகார்தாரர்கள், 216 சாட்சிகள், 392 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 102 சந்தேகப்

பேர்வழிகளும் அடங்குவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.