NATIONAL

மஹா கண்காட்சியில் பார்க்கிங் இலவசம்

14 செப்டெம்பர் 2024, 5:59 AM
மஹா கண்காட்சியில் பார்க்கிங் இலவசம்

புத்ராஜெயா, செப் 14: இன்று தொடங்கி மலேசிய விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சி (மஹா) 2024 க்கு வருபவர்களுக்கு பார்க்கிங் இலவசம் ஆகும்.

இதை வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பார்வையாளர் நுழைவு செயல்முறையை விரைவுபடுத்துவதும், நுழைவாயிலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி செர்டாங்கில் கடந்த புதன்கிழமை தொடங்கி  செப்டம்பர் 22 வரை நடைபெறும்.

மேலும், பள்ளி விடுமுறை என்பதால் அதிக மக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் RM5 பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.