NATIONAL

மலேசியா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதைகள் மூடப்படும்

14 செப்டெம்பர் 2024, 5:35 AM
மலேசியா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதைகள் மூடப்படும்

கோத்தா கினாபாலு, செப் 14: செப்டம்பர் 16 அன்று மெர்டேகா திடலில் இரவு 7 மணிக்குத் தொடங்கும் மலேசியா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சில பாதைகள் நிரந்தரமாகவும் அல்லது அவ்வப்போது மூடப்படும்.

மெர்டேகா360 என்ற அதிகாரப்பூர்வ முகநூல் சமூகப் பக்கத்தின் மூலம், சிம்பாங் தீகா புக்கிட் பெண்டேரா பாதை, கோத்தா கினாபாலு சமூக மண்டபத்திற்கு நுழையும் பாதை மற்றும் சிம்பாங் பிந்து கெர்பாங் இஸ்தானாவிலிருந்து மெர்டேகா திடலை நோக்கி செல்லும் பாதை ஆகியவை நிரந்தரமாக மூடப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்டாரன் பகுதியில் உள்ள கேஎஃப்சிக்கு அருகிலுள்ள ஜாலான் பாடாங்கின் நுழைவாயில் அவ்வப்போது மூடப்படும்.

அப்பகுதி வழியாக செல்லும் சாலைப் பயனாளிகள் சுமூகமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்குக் கவனமாகவும், போக்குவரத்து காவல்துறையின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்கு, http://www.merdeka360.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.