NATIONAL

1,870 டிங்கி சம்பவங்கள் பதிவு – ஒருவர் உயிரிழப்பு

14 செப்டெம்பர் 2024, 3:14 AM
1,870 டிங்கி சம்பவங்கள் பதிவு – ஒருவர் உயிரிழப்பு

புத்ராஜெயா, செப் 14: செப்டம்பர் 1 முதல் 7 வரையிலான 36வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (1,765) ஒப்பிடும்போது 1,870ஆக அதிகரித்துள்ளது. மேலும், இக்காலக்கட்டத்தில் ஒருவர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 82,485 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்

இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 98,442ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்

ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

இவ்வாண்டு 89 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 59 இறப்புகள்

மட்டுமே பதிவாகி இருந்தன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

​​மேலும், தொற்றுநோயியல் 35வது வாரத்தில் 53 ஹாட்ஸ்பாட் இடங்கள்

பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

அதாவது சிலாங்கூரில் 37 இடங்களும்,கோலாலம்பூர், புத்ராஜெயாவில் 6 இடங்களும், நெகிரி செம்பிலான், பேராக்கில் தலா 4 இடங்களும், கிளந்தானில் 2 இடங்களும்  பதிவாகியுள்ளன.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.