NATIONAL

உரிமம் இல்லாததால் இரண்டு மின்கல மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூடப்பட்டன

13 செப்டெம்பர் 2024, 9:35 AM
உரிமம் இல்லாததால் இரண்டு மின்கல மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூடப்பட்டன

ஷா ஆலம், செப் 13: உற்பத்தி நடவடிக்கைகளுக்கான உரிமம் இல்லாத காரணத்தால் ஈஜோக்கைச் சுற்றியுள்ள இரண்டு மின்-கழிவு மறுசுழற்சி தொழிற்சாலைகளை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டது. மேலும், அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், புக்கிட் படோங் மற்றும் ஜாலான் கண்டார், கம்போங் ஹார்மோனி ஆகிய இடங்களில் உள்ள அந்த இரண்டு தொழிற்சாலைகளும் துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தொல்லைகளை ஏற்படுத்துகின்றன என கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய நிறுவனங்களுடனான கூட்டு நடவடிக்கையில், உலோகக் கழிவுகள், உலர் பேட்டரிகள், பிளாஸ்டிக் சர்க்யூட் பலகைகள் மற்றும் தாமிரக் கழிவுகள் போன்றவற்றை இரு வளாகங்களும் சேமித்து தொழில் புரிவதாக சந்தேகிக்கப்படுகிறது.

"கைப்பற்றுதலில் மின்-கழிவு தொடர்பான ஃபோர்க்லிஃப் போன்ற உபகரணங்களும் அடங்கும்," என்று தெரிவிக்கப்பட்டது.

வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிம விதிகளின் (கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்) 2007 UUK 3 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் துறை இரசாயனத்துறையின் பகுப்பாய்வுக்காக மின்-கழிவுகளின் மாதிரிகளை எடுத்ததாகவும், குடிநுழைவுத்துறை இலாக்கா மூன்று வெளிநாட்டினரை ஆவண மதிப்பாய்வுக்காக தடுத்து வைத்ததாகவும் எம்பிகேஸ் தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.