NATIONAL

சரியான நேரத்தில்  தகுந்த உதவிகள், வழிகாட்டல்  வேண்டும் என்கிறார்  இந்திய  சமூகத் தலைவர் ஸ்ரீ செத்தியா  திரு. முத்து  

13 செப்டெம்பர் 2024, 6:48 AM
சரியான நேரத்தில்  தகுந்த உதவிகள், வழிகாட்டல்  வேண்டும் என்கிறார்  இந்திய  சமூகத் தலைவர் ஸ்ரீ செத்தியா  திரு. முத்து  
சரியான நேரத்தில்  தகுந்த உதவிகள், வழிகாட்டல்  வேண்டும் என்கிறார்  இந்திய  சமூகத் தலைவர் ஸ்ரீ செத்தியா  திரு. முத்து  
சரியான நேரத்தில்  தகுந்த உதவிகள், வழிகாட்டல்  வேண்டும் என்கிறார்  இந்திய  சமூகத் தலைவர் ஸ்ரீ செத்தியா  திரு. முத்து  

கோலாலம்பூர், செப் 13: தனது குடும்பம் இரண்டு மகன்களைக் கொண்ட சிறிய குடும்பம் என்றாலும், மக்கள் சேவையில் உள்ள ஈடுபாட்டால் தன்னைச் சுற்றிப் பரிதவிக்கும்  மக்கள் துன்பத்தில் பங்கு எடுத்துக் கொள்வதால் பெரிய  ஒரு குடும்பச் சுமை  தனக்கு  இருப்பதாக எப்பொழுதும் உணர்வதாக திரு. முத்து (65) சொல்கிறார்.

நீண்ட காலமாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், ஸ்ரீ சித்தியா தொகுதியில் உள்ள இந்தியர்களின் பிரச்சனைகளை களைய பாடுபட்டு வருகிறார். தனக்குத் துணையாக  2019 ம் ஆண்டில் ஸ்ரீ செத்தியா நடவடிக்கை குழு என்ற  இயக்கத்தை பதிவு செய்து, அப்பகுதி  மக்களின் தேவைகளை கவனித்து வந்தார்.

சமூகப் பிடிப்பு கொண்ட  அவரின் சேவையை அங்கீகரித்து அதை  விரிவு படுத்தும் விதமாக   அப்போதைய ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர்  மாண்புமிகு ஹலிமி  2021 ல் ஆண்டில் இந்திய சமூகத் தலைவராகத் திரு. முத்துவை நியமித்தார். கடந்த  இரண்டு தவணையாக இந்தியச் சமூக தலைவராக இருந்து வந்தாலும், அத்தொகுதி வாழ் மக்களிடம் நீண்ட காலமாகத் தொடர்பில் இருப்பதை அவரின் சேவைகளின்  கோப்புகள் காட்டுகின்றன.

இத்தொகுதியில் வாழும் மக்களின் குறிப்பாக இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து வினவியதற்கு, அடுக்கடுக்கான பிரச்சனைகளை எடுத்து வைத்தார். மிக முக்கியமானது இந்தியர்கள் வீடு இல்லாமல் இருப்பதும் வேலை வாய்ப்புகள் இன்றி இருப்பது நம் சமூகத்தில் நிலவும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஆரம்பம், ''பிள்ளையார்  சுழி'' என்றார் அவர்.

இத்தொகுதி குறுகிய காலத்தில் பல பெரிய மாற்றங்களைக் கண்டு வந்ததால் , மக்கள்  அம்மாற்றங்களின் தாக்கங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தத்தளிப்பதின் அடையாளமாக அங்குள்ள மக்களின்  பிரச்சனைகள் விளங்குகின்றன என்றார் அவர்.

தோட்டப் பகுதியில் வாழ்ந்த மக்களை திடீரெனக் குடியிருப்பு அற்றவர்களாகவும், வேறு சிலரை மாடி வீட்டுக் குடியிருப்பாளராகவும் மாற்றியதும்,  துவி சக்கர வண்டி பயன்படுத்தக்  கூடப் பக்குவமடையாதவர்களைக்  கார், லாரி, ஆகாய விமானம் ( சுபாங் ஆகாய விமான நிலையம்  கட்ட இங்கிருந்த  தோட்டங்களை  கையகப் படுத்தியதை குறிப்பிட்டார்)   என்ற இயந்திர யுகத்தில் தள்ளினால் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்காதா?   ரப்பர்  காடுகளில் வாழ்ந்த சமுதாயத்தை காண்கிரேட் காடுகளில்  தள்ளி விட்டால், அது நிலை குலையாதா?

இந்தியர்கள் இன்று நிலை  குலைந்ததற்கு இது மட்டுமல்ல, அவர்கள் தடுமாறிய போது  கைப்பிடித்து தூக்கிவிட,  வழிக்காட்ட துணை இல்லாமல் போனது சுதந்திர மலேசியாவின்  மிகப்பெரிய  தோல்வி, தொழிலாளர்களின்  ஏமாற்றம்  என்றார் முத்து.

மக்கள் நலன் திட்டங்கள் 

சிலாங்கூர் மாநிலத்தின் மக்கள் நலன் திட்டங்களைப் பட்டியலிட்டதோடு, அத்தொகுதி மக்களுக்கு அத் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் தான்  மட்டுமின்றி,தனக்கு துணையாக  ஸ்ரீ சித்தியா நடவடிக்கை குழுவினர் செயல்படுவதாகவும்.  அத்தொகுதி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களின் குழு  பெரும் உதவியாக இருப்பதாக கூறினார்.மக்கள் நலன் பேணும்,  இக்குழுவின் கூட்டு முயற்சியால் கம்போங் லிண்டோங்கானில்  ஒரு மருத்துவ முகாமை நடத்தியதாகவும்  அதில் பொதுமக்கள் கலந்து ஆதரவு வழங்கியதுடன் , சட்டமன்ற உறுப்பினரும் , அப்பகுதிக்கான  மாநகராட்சி  உறுப்பினர்  சுகுமாரனும் கலந்து கொண்டதாகக் கூறினார்.

கல்வியை கைவிடும் மாணவர்கள்

பள்ளிக்குச் செல்லாத மாணவர்கள் விவகாரம் இன்றைய, இந்தியச் சமுதாயத்திற்கு  முக்கிய சவாலாகும் என்கிறார். நாம் அனைவரும்  அக்கறை கொள்ள வேண்டிய மிக முக்கிய விவகாரமாகும். இது என்றார் அவர். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மாநில அரசு ஆண்டுக்கு 300 வெள்ளி பள்ளி பேருந்து உதவி கட்டணமாக கொடுத்தாலும், பேருந்து கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால்  மாணவர்களை  பள்ளிக்கு  அனுப்ப   முடியவில்லை என்கிறார்கள் பெற்றோர்  என்றார் கே.கே.ஐ  முத்து.

ஸ்ரீ செத்தியா  தொகுதியில் உள்ள  சுபாங் 2 , அடுக்கு மாடி வீடமைப்பு தொகுப்பிலிருந்து  கிளேன் மேரி தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குச் செல்ல மாதப் பஸ் கட்டணம் ரிங்கிட் 120 தாக இருப்பதாகவும்,  போக்குவரத்து பிரச்சனைகள்  மாணவர்கள்  கல்வியைக் கைவிடக் காரணமாவதாகக் கூறுகிறார் திரு. முத்து.

பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் சிக்கலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும்  என்று '' சுபாங் 2 '' குடியிருப்புவாசிகளை கேட்டுக்கொண்டார். பள்ளி செல்லாத மாணவர்களின் விபரங்களைக் கொடுக்கப் பலர் முன் வரவில்லை என்று வருத்தப்பட்டார் திரு. முத்து.

ஒரு குடும்பத்தை  (பெயரைக் குறிப்பிடவில்லை) சார்ந்த 3 பிள்ளைகளின் கல்விக்காக ''சுபாங் 2'' , அடுக்குமாடி வீட்டுத் தொகுப்பிலிருந்து கிளேன்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் அருகில் உள்ள வாடகை  வீட்டில்  குடியேற்றிய  சுவாரஸ்யமான தகவலையும்    பகிர்ந்தார்  திரு முத்து.   அவரின் குழுவினர்  ஆற்றிய  சீரிய தொண்டால்    ஒரே குடும்பத்தில் கல்வியை  கை விட்ட  மூன்று பிள்ளைகளின்,  கல்வியை  காப்பாற்ற  முடிந்தது  என்பதை  நினைவுகூர்ந்தார்.

மாநில உதவிகளுடன் மத்திய அரசு உதவித் திட்டங்களின் வழியும் பல உதவிகள் அங்குள்ள மக்களுக்கு கிடைக்க பாடுபட்டு  வருவதாகவும்  கூறிய அவர்.  சுமார் 25 பேருக்கு உடல் ஊனமுற்றோர் அடையாள கார்டு பெற்று தந்துள்ளதாகவும். 5 பிறப்பு சான்றிதழ்,  அடையாள பத்திர விவகாரங்களுக்கு தீர்வு கண்டுள்ளதாகவும் அதற்கான உதவிகளை மை செல் அமைப்பின் வழி பெற்றதாகவும். பிங்காஸ் மற்றும்  பெடுலி சி ஹாட் , ஜ சீட், ஊசிய இமாஸ், சொஸ்கோ, ஹிஜ்ரா போன்ற இயக்கங்களின் உதவிகளையும் மக்களுக்கு பெற்றுத் தருவதாகவும் நேரடி பேட்டியில். ஸ்ரீ செத்தியா  தொகுதி  இந்திய  சமூகத் தலைவர்  திரு. முத்து கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.