ஷா ஆலம், செப். 12- எதிர்வரும் 2030ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூர் வான்
கண்காட்சியை (எஸ்ஏஎஸ்) தென்கிழக்காசியாவின் சிறந்த நிகழ்வுகளில்
ஒன்றாக ஆக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் பங்கேற்புடன் துரிதமாக விரிவாக்கம் கண்டு வரும்
இந்த கண்காட்சி இந்த பிராந்தியத்தின் தலைசிறந்த வான் போக்குவரத்து
மையமாக சிலாங்கூர் விளங்குவதை பறைசாற்றும் விதமாக
அமைந்துள்ளது என்று வர்த்தகம் முதலீடு மற்றும் போக்குவரத்து
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக இந்த முன்னெடுப்பு
விளங்குவதேடு சிலாங்கூர் மாநில மக்களுக்கு உயர் வருமானம் ஈட்டித்
தரும் துறையாகவும் மாறி வருகிறது என்று சிலாங்கூர் வான் கட்சியில்
உரையாற்றிய போது அவர் சொன்னார்.
முன்னதாக, புக்கிட் ஜெலுத்தோங் ஸ்கைபார்க் பிராந்திய வான்
போக்குவரத்து மையத்தில் நடைபெறும் நான்காவது சிலாங்கூர் வான்
கண்காட்சிக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர்
ஷார் வருகை புரிந்தார்.
இந்த நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர்
மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) தலைமைச் செயல்முறை அதிகாரி
சைபோல்யாசான் எம்.யூசுப், இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமை
செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ் ஆகியோர்
கலந்து கொண்டனர்.


