NATIONAL

ஒரு மாதக் குழந்தை இறந்த வழக்கில் செவிலியர் கைது

11 செப்டெம்பர் 2024, 8:19 AM
ஒரு மாதக் குழந்தை இறந்த வழக்கில் செவிலியர் கைது

கோத்தா பாரு, செப் 11: நேற்று தனிமைப்படுத்தப்பட்ட மையம் ஒன்றில் ஒரு மாதக் குழந்தை இறந்ததற்குக் காரணமான புறக்கணிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக செவிலியர் ஒருவர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) (a) இன் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் 20 வயதுடைய அப்பெண்ணை அடுத்த செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு தலைமை நீதிபதி இம்ரான் ஹமீட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தனது தரப்பு புகார் பெற்றதை உறுதிசெய்து, சம்பந்தப்பட்ட பெண்ணை மாலை 6 மணிக்கு கைது செய்தோம் என்று கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ரோஸ்டி டவுட் கூறினார்.

காலை 5.30 மணியளவில் குழந்தையை பராமரிக்க நியமிக்கப்பட்ட செவிலியர் பால் கொடுத்த பிறகு அக்குழந்தை மயக்கமடைந்ததை அடுத்து இச்சம்பவம் நடந்ததாக விசாரணை முடிவுகளில் தெரியவந்துள்ளது என்றார்.

பின்னர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.