NATIONAL

ஹோம் ஸ்டே தங்குமிடங்களை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

6 செப்டெம்பர் 2024, 3:44 AM
ஹோம் ஸ்டே தங்குமிடங்களை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

ஶ்ரீ கெம்பாங்கன், செப் 6: விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படும்  அங்கீகாரமற்ற  பொருளாதார மேம்பாடு திட்டங்களை சமாளிக்க சிலாங்கூர் அரசாங்கம் கிராமப்புற தங்குமிடங்களை (ஹோம்ஸ்டே)  அங்கீகரிக்க தக்க மேம்பாடு  வழிகாட்டிகளை  செயல்படுத்தும்.

ஹோட்டல் போன்ற பதிவு பெற்ற தங்குமிட  துறையுடன் போட்டியிடும் வீடுகளை  (ஹோம்ஸ்டே)  தங்குமிடங்களாக்கும் முறையை  சட்டப்பூர்வமாக்க, அவை நிர்ணயிக்கப்பட்ட  தரநிலை படி செயல்படுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

“விவசாய நிலத்தில் வீடுகள் கட்டப்படுவதால், ஹோட்டல் நடத்துனர்களிடமிருந்து புகார்கள் வருவதோடு, பிரச்சனையும் உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறோம், எனவே, அவற்றை சட்டப்பூர்வமாக்க உதவ முயற்சிக்கிறோம்.

"இந்த இரண்டு தொழில்களும் தொடர்ந்து வளர வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. ஏனெனில் அவை தனிப்பிட்ட அம்சங்களைப் கொண்டிருக்கின்றன. மேலும் நாங்கள் சிறப்பாக ஒருங்கிணைப்போம்," என்று அவர் நேற்று கூறினார்.

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம், பிபிடி ஆகியவற்றில் ஹோம்ஸ்டேவை பதிவு செய்ய தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தங்கும் இடத்தில் தேவையற்ற சம்பவம் நடந்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

"அது போன்ற திட்டங்களில் அசம்பாவிதம் ஏதும் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை, அது, மாநில அரசு கண்காணிக்கவில்லை என்ற விமர்சிக்கப்படும். மேலும் பிபிடி யுடன் சம்பந்தப்பட்ட சிக்கல் இருந்தாலும், நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.