NATIONAL

வட கொரியாவில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை

6 செப்டெம்பர் 2024, 2:36 AM
வட கொரியாவில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை

ஷா ஆலம், செப். 6 - நாட்டின் வட பகுதியில் கடந்த  ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட  பெரும் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதைத்  தொடர்ந்து வடகொரிய அரசாங்கம் பல அரசாங்க அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றியதாக  சூசன் தொலைக்காட்சி தெரிவித்தது.

வெள்ளம் பாதித்த பகுதியைச் சேர்ந்த  20 முதல் 30  அரசு அதிகாரிகள்  கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதாக தென் கொரிய அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி சூசன் தொலைக்காட்சி குறிப்பிட்டது.

மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஜாகாங் மாநிலத்தின் பல பகுதிகளில்  ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்திற்குப் பலியாகியிருக்கலாம் என்று அத்தொலைக்காட்சி கூறியது.

கடந்த ஜூலை மாத  இறுதியில் நடைபெற்ற  கட்சியின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றிய  கிம் ஜாங்-உன், தங்கள் கடமைகளை "புறக்கணிப்பவர்கள்" மற்றும் உயிர் இழப்புகளுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பேன் என்று எச்சரித்திருந்தார்.

அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் சுமார் 4,100 வீடுகளோடு  சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களும் சேதமடைந்துள்ளன. மேலும் சீனாவுடன் பாலம் மூலம் இணைக்கப்பட்ட வர்த்தக மையமான சினுய்ஜூ நகரில் உள்ள  சுமார் 3,000 ஹெக்டர் (7,410 ஏக்கர்) விவசாய நிலங்களும் அழிந்தன என்று கொரிய அரசு ஊடகம் கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.