கோலாலம்பூர், செப்.5 - தேசத்தின் அடிப்படைக் கொள்கைகள் குறித்து பொதுக் கல்வி அறிவை உயர்த்தவும், அதன் மூலம் தவறான புரிதல்களை தடுக்கவும் கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் பொதுமக்கள்  அணுக கூடியதாக மாற்றுவது மிகவும் முக்கியமானது என்று தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் கே.சரஸ்வதி கூறினார்.

சில குழுக்கள்  சமூக உணர்வுகள் தூண்டப்படும் போது, அவை தவறாக வழிநடத்த படுவதை தடுக்க, பொதுமக்கள் கூட்டரசு, அரசியலமைப்பை  புரிந்து கொண்டிருந்தால், தவறான வழிக்காட்டலை தடுக்கலாம்  என்று அவர் வலியுறுத்தினார்.

“தற்போது, மலாய்க்காரர்களின் நிலை, அரச அமைப்பு மற்றும் இஸ்லாம் பற்றிய பிரச்சனைகளை எழுப்புவதன் மூலம் பயத்தை தூண்ட முயற்சிப்பவர்கள் பலர் உள்ளனர்.

“அரசியலமைப்புச் சட்டத்தை நாம் உண்மையாகப் புரிந்து கொண்டால் இந்தக் பிரச்சனைகள் எதுவும் எழாது. எனவே, அரசியலமைப்பை நாம் அணுக கூடியதாக மாற்ற வேண்டும். இதன் மூலம் நமது அரசியலமைப்பு நமது நாட்டிற்கான தனித்துவமான விதிகள் மற்றும் நியாயங்களைக் கொண்டுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டு அங்கீகரிக்க முடியும், ”என்று சரஸ்வதி கூறினார்.

இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை தேர்தல் காலங்களில் சில கட்சிகள் ஆதரவையும் வாக்குகளையும் பெறுவதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்று சரஸ்வதி விரிவாகக் கூறினார்.

எனவே, கூட்டரசு அரசியலமைப்பை பற்றிய தெளிவான புரிதலை வழங்குவதற்கான உரையாடல் அமர்வுகள், பொதுமக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளவும்,  பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு எதிர்கொள்ளவும்  முடியும்  என்றார்.