NATIONAL

ஷா ஆலம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியைக் காண பொதுமக்களுக்கு அழைப்பு

5 செப்டெம்பர் 2024, 6:26 AM
ஷா ஆலம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியைக் காண பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், செப் 5: எதிர்வரும் சனிக்கிழமையன்று செக்‌ஷன் 16 இல் உள்ள திடலில் ஷா ஆலம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

ஷா ஆலம் மாநகராட்சியின் நடவடிக்கைகளை பரப்புவதற்கும், உள்ளூர் சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி காலை 8 மணிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் கூறினார்.

"இந்நிகழ்ச்சி முழுவதும் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வழங்கப்படும்.

"கரோக்கே போட்டி, கேக் அலங்காரம், மற்றும் அதிர்ஷ்ட குலுக்கு ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்," என்று முகமட் அசார் முகமட் ஷாரீப் கூறினார்.

மேலும், சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் இரத்த தானத் திட்டமும், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை போன்ற துறைகள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்புக் கண்காட்சியும் நடைபெறும்.

சிலாங்கூர் காவல் படைத் தலைமையகத்தின் துப்பாக்கிக் கண்காட்சி மற்றும் போதைப்பொருள் குற்றத்தின் ஆபத்துகள், காட்டு விலங்குகள் கண்காட்சி மற்றும் குடிமைத் தற்காப்பு முகமையின் பாம்பு பிடிக்கும் தகவல் போன்றவைகளும் இந் நிகழ்வில் வருகையாளர்களுக்கு  காண்பிக்கப்படும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.