NATIONAL

பிபிஆர் திட்டம் மக்கள் குடியிருப்புத் திட்டமாக மறுபெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

5 செப்டெம்பர் 2024, 6:24 AM
பிபிஆர் திட்டம் மக்கள் குடியிருப்புத் திட்டமாக மறுபெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

ஜோகூர் பாரு, செப் 5: மக்கள் வீட்டுத் திட்டத்தை (பிபிஆர்) மக்கள் குடியிருப்புத் திட்டமாக (பிஆர்ஆர்) மறுபெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜோகூரில் இத்திட்டம் தொடங்கப்படும் என்றும், கட்டுமானத்திற்கான முதல் இடமாக லார்கின் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் இங் கோர் மிங் கூறினார்.

"புதிய பிஆர்ஆர் திட்டத்திற்கு இந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்தது. நாங்கள் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வருவோம். அதாவது மலிவு விலையில் தரமான பிஆர்ஆர் திட்டம் அமையும் என செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பிஆர்ஆர் கட்டுமானம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.