(ஆர்.ராஜா)
கிள்ளான், செப். 5 - கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.)
ஏற்பாட்டில் இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெறும் தீபாவளி
சந்தையில் வியாபாரம் செய்ய விரும்புவோர் நாளை செப்டம்பர் 6ஆம்
தேதிக்குள் விண்ணப்பிப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கடைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 12
முதல் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில்
அந்த அந்த காலக்கெடு செப்டம்பர் 6ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் அரச மாநகர் மன்றம் கூறியது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வியாழக்கிழமை
கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர்
17 முதல் 30 வரை லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளி சந்தைக்கு
எம்.பி.டி.கே. ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சந்தைக்கு விண்ணப்பம் செய்தவற்கான கால அவகாசம் நாளை
முடிவடைந்தப் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வியாபாரிகளுக்கு
விளக்கமளிப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று மாநகர் மன்றம் தனது
பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி கடைகள் குலுக்கள் முறையில்
தேர்ந்தெடுக்கப்பட்டு அக்டேபார் 17 தொடங்கி இரு வாரங்களுக்கு
வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அது
தெரிவித்தது.
கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு கிள்ளான், லோரோங் திங்காட்
மற்றும் ஜாலான் தாலி ஆயரில் மொத்தம் 153 கடைகள் சிறு
வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


