NATIONAL

சொக்சோவிடம் போலி இழப்பீட்டுக் கோரிக்கை - மருத்துவர்கள் உள்பட 32 பேர் கைது

4 செப்டெம்பர் 2024, 3:28 AM
சொக்சோவிடம் போலி இழப்பீட்டுக் கோரிக்கை - மருத்துவர்கள் உள்பட 32 பேர் கைது

ஜோர்ஜ் டவுன், செப். 4 - சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு

நிறுவனத்திடம் முடத்தன்மை இழப்பீட்டைப் பெறுவதற்குப் போலி

கோரிக்கையை சமர்ப்பிக்கும் கும்பலுக்கு எதிரான விசாரணையில் உதவும்

பொருட்டு பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மருத்துவ அதிகாரிகள்

உள்பட 32 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.)

கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையை பெர்னாமாவிடம் உறுதிப்படுத்திய ஊழல்

தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி,

கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்க மருத்துவமனையின் இரு உயர்

மருத்துவ அதிகாரிகள் மற்றும் தனியார் நிபுணத்துவ மருத்துவமனை

அதிகாரி ஆகியோரும் அடங்குவர் என்றார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச் அதிரடிச் சோதனைகளில்

கைது செய்யப்பட்ட 32 பேரில் பத்தொன்பது சொக்சோ சந்தாதாரர்கள்,

எட்டு முகவர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் இரு இடைத் தரகர்கள்

ஆகியோரும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட சொக்சோ சந்தாரார்களில் பலர் பினாங்கு

மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் துறைமுகத்திலும் வேலை செய்து

வந்ததாகக் கூறிய அவர், விசாரணையின் போது மேலும் பலர் கைது

செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றார்.

கடந்த ஜூலை மாதம் மேலவையில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டதைத்

தொடர்ந்து இந்த போலி கோரிக்கை விவகாரம் மீது தாங்கள் தீவிர கவனம்

செலுத்தத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

சொக்சோவின் நிரந்தர முடத்தன்மை இழப்பீட்டு கோரிக்கைகளை

கையாளும் சில மருத்துவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து மனித வள அமைச்சு விளக்கமளிக்க வேண்டும் என்று செனட்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் கடந்த ஜூலை மாதம் மேலவையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.