NATIONAL

நாட்டில் முதலீடு வரவு RM160 பில்லியனாக அதிகரித்துள்ளது

4 செப்டெம்பர் 2024, 2:59 AM
நாட்டில் முதலீடு வரவு RM160 பில்லியனாக அதிகரித்துள்ளது

கோலாலம்பூர், செப் 4 - ஜனவரி முதல் ஜூன் 2024 வரை நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட முதலீட்டு வரவு RM160 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த முதலீடுகள் ஏறக்குறைய 3,000 புதிய திட்டங்களை உள்ளடக்கியதாக அவர் கூறினார். இது மலேசியர்களுக்கு 79,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்கும்.

"முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் போன்ற அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த அளவிலான முதலீடு எட்டப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.