NATIONAL

கடைசி நேர சிக்கலைத் தவிர்க்க பயணக் கட்டுப்பாட்டு நிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வீர்

3 செப்டெம்பர் 2024, 8:41 AM
கடைசி நேர சிக்கலைத் தவிர்க்க பயணக் கட்டுப்பாட்டு நிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வீர்

கோலாலம்பூர், செப் 3 - வரி செலுத்துவோர் வெளிநாடு செல்வதற்கு முன் தங்களது பயணக் கட்டுப்பாட்டு நிலையை முன்கூட்டியே சரிபார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வரி பாக்கி காரணமாக நாட்டின் நுழைவாயிலில் 'சிக்கிக்கொள்ளும்'  கடைசி நிமிட சிக்கலை வரி செலுத்துவோர் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் வருவாய் சேகரிப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி அசாஹருடின் முகமது அலி கூறினார்.

ஆகவே,  வரி பாக்கி அல்லது விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிப்பதற்கு ஏதுவாக வருமான வரி வாரியத்தின்  தரவுத்தளத்தில் தங்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பிற தகவல்களை வரி செலுத்துவோர் எப்போதும் புதுப்பிக்க வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.

பெரும்பாலான  வரி செலுத்துவோர் தகவலைப் புதுப்பிப்பதில்லை. அதனால்தான்  தங்கள் தனிப்பட்ட விவரங்களை எப்போதும் புதுப்பிக்குமாறு வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் நாங்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சமீபத்திய தரவுத்தளத்தில் மட்டுமே கிடைக்கும் என்று அவர் சொன்னார்.

வரி செலுத்துவோர் MyTax அகப்பக்கத்தை  பார்வையிடவும்  மின்னஞ்சல், வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் பெர்னாமா வானொலி நிகழ்ச்சியில் விருந்தினராகப் பங்கேற்றபோது தெரிவித்தார்.

நேரடியாக வரி வசூலிப்பை  நிர்வகிக்கும்  அரசு நிறுவனம் என்ற முறையில் வரி பாக்கி வைத்திருப்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கும் அதே வேளையில் சம்பளக் குறைப்பு உத்தரவு நடவடிக்கையையும் வருமான வரி வாரியம் எடுக்கலாம் என்று அசாஹருடின் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.