NATIONAL

ஐந்து முன்னணி உணவகங்களில் மலேசிய ஹலால் சான்றிதழ் இல்லை

3 செப்டெம்பர் 2024, 7:46 AM
ஐந்து முன்னணி உணவகங்களில் மலேசிய ஹலால் சான்றிதழ் இல்லை

ஷா ஆலம், செப் 3: நாட்டில் செயல்படும் ஐந்து முன்னணி உணவகங்களுக்கு மலேசிய ஹலால் சரிபார்ப்பு சான்றிதழ் (SPHM) இல்லை என்று மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) தெரிவித்துள்ளது.

அவை ஜானிஸ் உணவகம், பிளாக் கேன்யன், டோலி டிம் சம், மிஸ்டர் டக்கல்பி மற்றும் பொங்கோஸ் காவ் காவ் ஆகிய உணவு வளாகங்கள் என அத்துறை முகநூலில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

சில உணவு வளாகங்களின் ஹலால் நிலை குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு, ஜாகிமின் ``MYeHALAL` அமைப்பின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்பட்டது என அத்துறை கூறியது.

இதற்கிடையில், நான்கு கிளைகளைக் கொண்ட Ayam Penyet உணவகம் செல்லுபடியாகும் ஹலால் சரிபார்ப்பு சான்றிதழ்களைக் கொண்டிருப்பதாக ஜாகிம் தெரிவித்தது.

எந்தவொரு வளாகம் அல்லது தயாரிப்புக்கான ஹலால் நிலையை http://myehalal.halal.gov.my/portal-halal/v1/index.php என்ற இணைப்பின் மூலம் சரிபார்க்கலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.