NATIONAL

வான் கண்காட்சியில் (எஸ் ஏ எஸ்)  2,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

3 செப்டெம்பர் 2024, 7:44 AM
வான் கண்காட்சியில் (எஸ் ஏ எஸ்)  2,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

ஷா ஆலாம், செப் 3: அடுத்த வாரம் சிலாங்கூர் வான் கண்காட்சியில் (எஸ்ஏஎஸ்) நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியான கேரியர் கார்னிவலை முன்னிட்டு விமானம் மற்றும் விண்வெளித் துறையில்  உள்ள  2,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும்  பகிரப்படும்.

இத்திட்டம் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கான்கார்ட் ஹால், பிராந்திய விமான போக்குவரத்து மையம் (RAC) ஸ்காய்பார்க், சுபாங்கில் நடைபெறும் என்று முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

"இதில் சுமார் 2,159 வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இது வேலை தேடுபவர்களுக்கு வின்வெளித்துறையில் உள்ள  வேலை வாய்ப்புகளைப் பற்றி  அறிந்துக் கொள்ள  ஒரு வாய்ப்பாகும்" என்று இங் சீ ஹான் கூறினார்.

இந்நிகழ்வில் Airbus/Sepang Aircraft Engineering Sdn Bhd, Post Aviation Engineering Services Sdn Bhd, Batik Air மற்றும் AirAsia போன்ற நிறுவனங்கள் பங்கேற்க  உள்ளதாக MYFutureJobs முகநூலில் தெரிவித்துள்ளது.

மேலும், UMW Sdn Bhd, Drone Academy Asia, Skyways Technics Asia Sdn Bhd, Galaxy Aerospace (M) Sdn Bhd மற்றும் Airod Aerospace Technology Sdn Bhd ஆகிய நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

முன்னதாக, எஸ்ஏஎஸ் 2024 செப்டம்பர் 12 முதல் 14 வரை நான்காவது பதிப்பிற்காக 110 கண்காட்சி யாளர்களை ஈர்க்கும் என்று இங் சீ ஹான் தெரிவித்தார். பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும்.

இக்கண்காட்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் செக் குடியரசு ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இக்கண்காட்சியில் பொதுமக்கள் டயமண்ட் விமானம், பால்கன் 8x, கேரவன் மற்றும் பியாஜியோ அவந்தி போன்ற பல்வேறு வகையான விமானங்களை மிகவும் நெருக்கமாக பார்க்க வாய்ப்பு உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.