ஷா ஆலம், செப் 3: நாட்டில் கால்பந்தாட்ட வளர்ச்சியை ஊக்கப்படுத்த உதவுவதற்காக ஹரிமாவ் மலாயாவிற்கு RM10 மில்லியன் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
மலேசிய நிதி அமைச்சகத்தின் உறுப்பினர்களுடனான மாதாந்திர கூட்டத்தில் பேசிய பிரதமர், விளையாட்டுக்கான அர்ப்பணிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு 5 மில்லியன் ரிங்கிட் வழங்கியதாக அவர் சொன்னார்,
"இந்த RM15 மில்லியன், குறிப்பாக பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் நலன், பயிற்சி மற்றும் உணவுக்காக வழங்கப்பட்டது. இதன் மூலம் ஹரிமாவ் மலாயா வின் பெயரை ஆசியாவில் உயர்த்த முடியும்" என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.


